search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜ் தாக்கரே"

    ராமர் கோவில் பிரச்சினையில் கலவரத்தை ஏற்படுத்த மத்திய அரசு சதி செய்வதாக மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரே கூறியுள்ளார். #RamTemple #RajThackeray #Riot #BJP
    மும்பை:

    மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரே மும்பையில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியதாவது:-

    எனக்கு டெல்லியில் இருந்து ஒரு போன் அழைப்பு வந்தது. அயோத்தி ராமர் கோவில் பிரச்சினையில் கலவரத்தை ஏற்படுத்த மத்திய அரசு சதி செய்வதாக போனில் பேசியவர் என்னிடம் தெரிவித்தார். மஜ்லிஸ் என்ற இஸ்லாமிய கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி துணையுடன் இந்த வன் முறையை ஏற்படுத்த திட்டம் தீட்டப்பட்டு உள்ளது.

    இதை நான் சாதாரணமாக எடுத்து கொள்ளவில்லை. மிகவும் தீவிரமான பிரச்சினையாக கருதுகிறேன். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட கடந்த 4½ ஆண்டு காலத்தில் மத்திய அரசு எந்த ஒரு உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது அவர்களுக்கு மதகலவரத்தை தூண்டுவதை தவிர வேறு வழியில்லை.

    ராமர்கோவில் கட்ட நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கோவில் கட்ட வேண்டும் என்று நான் வலியுறுத்தவில்லை. தேர்தலுக்கு பிறகு கோவில் கட்டுவதில் எந்த பிரச்சினையும் இருக்காது. #RamTemple #RajThackeray #Riot #BJP

    பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய தனுஸ்ரீ தத்தா, தற்போது ராஜ்தாக்கரே மீது புகார் கூறியிருக்கிறார். #TanushreeDutta
    பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. 2005-ம்ஆண்டு வெளியான ‘ஆசிக் பனாயா ஆப்னே’ என்ற இந்தி படத்தின் மூலம் அவர் அறிமுகம் ஆனார்.

    பல்வேறு படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்து தனுஸ்ரீதத்தா பிரபலம் ஆனார். தமிழில் நடிகர் விஷாலுடன் இணைந்து ‘தீராத விளையாட்டு பிள்ளை’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

    இந்தநிலையில் பாலிவுட்டின் மூத்த நடிகரான நானாபடேகர் மீது தனுஸ்ரீ தத்தா கூறிய பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ‘ஹார்ன் ஒகே பிளீஸ்’ என்ற படப்பிடிப்பின் போது நானா படேகர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி தாக்குதலில் ஈடுபட்டார் என்று கூறினார்.

    மேலும் தான் சினிமாவில் அறிமுகமாகும் போது டைரக்டர் விவேக் அக்னி கோத்ரி தன்னை ஆடைகளை களைந்துவிட்டு கதாநாயகன் முன்பு நடனமாட கூறியதாக தனுஸ்ரீதத்தா புகார் தெரிவித்து இருந்தார்.

    இந்தநிலையில் மராட்டிய நவநிர்மான் சேனா (எம்.என்.எஸ்) கட்சி தலைவர் ராஜ் தாக்கரே மீது தனுஸ்ரீ தத்தா பாய்ந்து உள்ளார். குண்டர்களை அனுப்பி தன் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    சிவசேனா தலைவர் பால் தாக்கரேவை மாற்ற விரும்பிய ராஜ்தாக்கரே கிரிமினல் மனநிலை கொண்டவர். என்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அவர்தான் பின்னணியில் உள்ளார். குண்டர்களை அனுப்பி தாக்குதல் நடத்தியுள்ளார்.

    ராஜ்தாக்கரே ஒரு குண்டர். அவரை போன்ற குண்டர்கள் தான் அந்த கட்சியில் உள்ளனர். பெண்களை தாக்கும் நபர் ஒரு தலைவராக இருக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தனுஸ்ரீ தத்தா கார் தாக்கப்படும் வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில் ராஜ்தாக்கரே மீது அவர் இந்த கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஓட்டுச்சீட்டு முறையை கொண்டுவராவிட்டால் தேர்தலை புறக்கணிக்கவேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே கடிதம் எழுதி உள்ளார். #RajThackeray #election
    மும்பை :

    நடைமுறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்யப்படுவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

    இந்த நிலையில் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

    அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலேயே மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்விக்குறி எழுந்தது.

    பல தொகுதிகளில் எனது கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களும், எம்.எல்.ஏ.க்களும் தீவிரமாக உழைத்தனர். அவர்களுக்கு தோல்வியே மிஞ்சியது. சில தொகுதிகளில் எங்களது வேட்பாளருக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை. இது எப்படி சாத்தியமாகும்?



    அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, ஜப்பான் மற்றும் கொரியா போன்ற முன்னேறிய நாடுகள் தற்போதும் ஓட்டுச்சீட்டு முறையை தான் கடைப்பிடிக்கின்றன.

    இந்தியா, நைஜீரியா, வெனிசுலா உள்ளிட்ட சில நாடுகளே மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்துகின்றன. இந்த முரண்பாடான முறையை நாம் ஏன் கடைப்பிடிக்க வேண்டும்?

    இதுகுறித்து அரசியல் கட்சிகள் ஒன்றாக வலியுறுத்தவில்லை என்றால், நாம் ஜனநாயக நாடு என்ற பெருமையை இழக்க நேரிடும்.

    எனவே பழைய ஓட்டுச்சீட்டு முறையை கொண்டுவரவேண்டும் அல்லது வாக்களித்ததற்கான ஒப்புகை சீட்டு அளிக்கும் எந்திரத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #RajThackeray #election
    முஸ்லிம்கள் தொழுகைக்கான அழைப்பு விடுக்க ஸ்பீக்கர்களை பயன்படுத்துவதை விமர்சித்த ராஜ் தாக்கரேவுக்கு சுப்பிரமணிய சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார். #SubramaniyaSwami #RajThackeray
    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் நவ்நிர்மண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது, முஸ்லிம்கள் தொழுகைக்கான அழைப்பு விடுக்க ஸ்பீக்கர்களை பயன்படுத்துவது ஏன்? என கேள்வி எழுப்பி இருந்தார். மேலும், தொழுகை நடத்த விரும்பினால் அவர்கள் வீட்டிலேயே தொழுதுகொள்ளட்டும் எனவும் ராஜ் தாக்ரே கூறியிருந்தார்.

    இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதுதொடர்பாக பேசிய இந்திய முஸ்லிம்கள் தனிநபர் சட்ட வாரியத்தின் உறுப்பினர் ஃபரூக்கி, முஸ்லிம்கள் தங்கள் தொழுகைக்கு அழைப்பு விடுக்க ஸ்பீக்கர் உபயோகிப்பதை தவறு என நினைத்தால், இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களின் சடங்குகளையும் அவர் தடை செய்யவேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.



    இந்த நிலையில், ராஜ்தாக்கரேவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, ராஜ் தாக்கரேவின் இந்த கருத்து முற்றிலும் அரசியல் நோக்கமுடையது என விமர்சித்துள்ளார். மகாராஷ்டிராவில்  முதன்மை கட்சிகளில் ஒன்றாக இருக்கும் சிவசேனாவுடன் போட்டி போடுவதை வெளிக்காட்டவே ராஜ் தாக்கரே இவ்வாறு கூறியதாக சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். #SubramaniyaSwami #RajThackeray
    மும்பையில் நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேயை நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் நேற்று சந்தித்தார்.
    மும்பை:

    நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் நேற்று மும்பை வந்திருந்தார். பின்னர் தாதரில் உள்ள மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேயின் கிருஷ்ணா குஞ்ச் இல்லத்துக்கு லதா ரஜினிகாந்த் சென்றார். அங்கு ராஜ்தாக்கரே மற்றும் அவரது மனைவி ஷர்மிளா தாக்கரே ஆகியோரை சந்தித்து பேசினார்.

    லதா ரஜினிகாந்த் உடனான இந்த சந்திப்பு குறித்து ராஜ் தாக்கரே, தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

    அதில், லதா ரஜினிகாந்த் உடனான சந்திப்பின் போது அரசியல், சினிமா, சமூகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக தெரிவித்து இருக்கிறார். அத்துடன் உரையாடலின் போது எடுத்த படங்களையும் ராஜ் தாக்கரே பகிர்ந்துள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க ஆயத்தமாகி வரும் நிலையில், அவரது மனைவி லதா ரஜினிகாந்த் நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேயை சந்தித்து அரசியல் குறித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×